செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: பெனால்டியில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்ஸர்லாந்து
வான்கூர்:
உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் பெனால்டியில் கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்ஸர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
கனடாவின் வான்கூரில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் கொலம்பியா அணியினர் சுவிட்ஸர்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதல் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.
இருப்பினும், இரு அணிகளின் கோல்காவலர்களும் அபாரமாக செயல்பட்டதால், நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் சுவிட்ஸர்லாந்து வீரர்கள் தங்களது வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினர்.
மறுபுறம், கொலம்பியா வீரர் டேவின்சன் சான்சஸ் முக்கியமான பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால், சுவிட்சர்லாந்து 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதியில் சுவிட்ஸர்லாந்து, அர்ஜெண்டினா அணியை எதிர்கொள்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
