செய்திகள் சிந்தனைகள்
உறுதிமிக்க மனிதர்களின் பாதையில் வாழ்க்கை, உப்புக் காற்றையும் கடுமையான நாட்களையும் ஓயாத அலைகளையும் வீசத்தான் செய்யும் - வெள்ளிச் சிந்தனை
கடற்கரை ஓரத்தில் நிற்கும் இந்தச் செடிகளைப் பாருங்கள். அவை அலைகளை எதிர்ப்பதில்லை. காற்றை தடுப்பதும் இல்லை. அவை அங்கேயே அசைந்தாடி, பின்னர் மீண்டும் நிமிர்ந்து நிற்கின்றன.
உறுதி மிக்க மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் புயலைவிட வலிமையானவர்கள் என்பதால் வெற்றி பெறுவதில்லை. மாறாக கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருக்கும் அதேவேளை, நெகிழ்வுத் தன்மையுடனும் வாழத் தெரிந்திருப்பதால் வெற்றி பெறுகிறார்கள்.
மனிதனை உருவாக்குவது சூழ்நிலைகள் அல்ல. மாறாக அவற்றையும் மீறி வாழத் தேர்ந்தெடுக்கும் விதமே.
உறுதிமிக்க மனிதர்களின் பாதையில் வாழ்க்கை, உப்புக் காற்றையும் கடுமையான நாட்களையும் ஓயாத அலைகளையும் வீசத்தான் செய்யும்.
ஆனால் அவர்களுக்குள் பிரகாசமான ஓர் ஒளி வீசிக்கொண்டிருப்பதால், மகிழ்வுடன் வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிக்கிறார்கள்.
வாழ்வின் அழகு என்பது சிரமங்கள் இல்லாத நிலை அல்ல. மாறாக, சூழல்களை சமாளித்து நிலைத்து நிற்கும் திறனே ஆகும்.
இதனால்தான் நபி (ஸல்) கூறினார்கள்: "முஸ்லிம் நாணல் பயிரைப் போன்றவர். காற்று எந்தப் பக்கம் வீசினாலும் அதை அது சாய்க்கும். காற்று அடங்கியதும் அது மீண்டும் நேராக நிமிரும். அதுபோலவே, முஸ்லிமும் சோதனைகளால் வளைக்கப்படுவார் (ஆனால் அவர் உறுதியாக இருப்பார்). தீயவன் (பாவி), காற்றடிக்கும்போது ஒடிந்து விழும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ் தான் நாடும்போது அதை ஒரேயடியாக உடைத்து சாய்த்துவிடுகிறான்" (புகாரி)
எவ்வளவு அற்புதமான உதாரணம்!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
