செய்திகள் கலைகள்
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
மும்பை:
நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஆல்பா திரைப்படம் ஐந்து நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 71.66 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் - ஷர்வாரி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான புதிய படம் “ஆல்ஃபா”. ஸ்பை ஆக்ஷன் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார்.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷர்வாரி, அனில் கபூர், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ’ஆல்பா’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 17.42 கோடி வசூலித்தது. இந்த நிலையில், ஐந்து நாள்களில் உலகம் முழுவதும் ரூ.71.66 கோடி வசூலித்துள்ளது.
ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. விமர்சனங்களால் இந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
