நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக விண்ணப்பம்: மாவார் வரவேற்கிறது:  ஹாஜி அப்துல் அலீம் சித்திக் 

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக விண்ணப்பம் செய்யும் நடைமுறையை வரவேற்பதாக மாவார் எனும் மலேசிய இந்திய முஸ்லிம் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஹாஜி அப்துல் அலீம் சித்திக் கூறினார். 

அந்நியத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒற்றை இலக்கவியல் தளமாக அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பின் (FWCMS) இ-கோட்டா (eQuota) பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார். அதனை எங்கள் சங்கம் வரவேற்கிறது என்று அப்துல் அலீம் தெரிவித்தார்.

இதன் மூலம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகளும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை மாவார் முழுமையாக வரவேற்கிறது.

நாட்டில் முறையான அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் இப்போது அத்தொழில் துறையினர் நேரடியால் தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இலக்கவியல் வாயிலாக விண்ணப்பம் செய்வதால் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும். எந்தவொரு குளறுபடிகளும் இருக்காது.

வங்சா கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடைகளுக்கு மேல் தங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. சிறிய கடைகளில் ஓரிரு ஊழியர்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தனியாக ஒரு இருப்பிடம் பார்த்து தங்க வைப்பது சிறு வர்த்தகர்களுக்கு சிரமம். வேலை செய்யும் இடத்திலேயே தாங்கிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவார் வேண்டுகோள் விடுக்கிறது என்று அப்துல் அலீம் சித்திக் கூறினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset