செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணிக்கு ஜொகூர் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்
ஜொகூர்பாரு:
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாக, மாநிலத்திற்கு சேவை செய்ய நம்பிக்கை கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஜொகூர் மக்களுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் டத்தோஶ்ரீ அன்வார்,
மக்களால் ஆணை வழங்கப்பட்டால், ஜொகூரின் நலன்களைப் பாதுகாக்க இந்தக் கூட்டணி கடுமையாக உழைக்க உறுதிபூண்டுள்ளது.
ஜொகூர் மக்கள் தங்கள் முடிவைத் தெரிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த மாநிலத்திற்கு சேவை செய்ய நம்பிக்கை கூட்டணிக்கு வாய்ப்பளிக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இறைவன் நாடினால், நாங்கள் கடுமையாக உழைத்து ஜொகூரின் நலன்களைப் பாதுகாத்து, அதனால் ஏற்படும் முன்னேற்றத்தை அனைத்து மக்களும் உண்மையாக உணர்வதை உறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
