நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

120க்கும் மேற்பட்ட முன்னாள் பூலாய் தொகுதி பெர்சத்து உறுப்பினர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்

பூலாய்:

பெர்சத்து பூலாய் தொகுதியின் 120க்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்களும் தலைவர்களும் இன்று நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கெம்பாஸ் மாநில சட்டமன்றத்திற்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முஹம்மது ஃபாயிசுதீன் முகமது புவாட்,

தாங்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தை முன்பே தெரிவித்திருந்ததாகவும், ஆனால் இன்று அதை பகிரங்கமாக அறிவிக்கத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.

நம்பிக்கை கூட்டணியில் இணைந்த முன்னாள் தலைவர்களில், பூலாய் தொகுதி ஸ்ரீகண்டி பெர்சத்துவின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் ரபிதா அனி, பூலாய் பிரிவு ஸ்ரீ கண்டியின் முன்னாள் செயலாளர் நோரியா மாட் தாவுட், புக்கிட் மேவா தொகுதி பெர்சத்துவின் முன்னாள் தலைவர் முகமது சுஹிமி அப்துல் ரஹ்மான், பல பிரிவு தொகுதி  உறுப்பினர்களும் அடங்குவதாக அவர் கூறினார்.

அவர்கள் தங்கள் எண்ணத்தை முன்பே தெரிவித்திருந்தனர். ஆனால் அதை அறிவிப்பதற்கான தயார்நிலை இன்றுதான் ஏற்பட்டது.

அவர்கள் இது குறித்து பெர்சத்து தலைமைக்கும் தெரிவித்துள்ளனர் என்று அவர் ஜொகூர் பாருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset