செய்திகள் மலேசியா
பேராக் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மடானி அரசின் சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரிங்கிட் மானியம்
ஈப்போ:
பேரா மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு மடானி அரசாங்கம் சார்பில் இன்று ஒரு கோடியே 10 லட்சத்து இரண்டாயிரத்து 546 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.
ஈப்போ கல்லுமலை முருகன் கோவில் வளாகத்தில் இன்று மிகப்பெரிய அளவில் தேசிய திருமுருகன் மாநாடு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக பேராக் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது.
பேராக் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு உதவும் வகையில் மடானி அரசாங்கம் மூலம் ஒரு கோடியே 10 லட்சத்து இரண்டாயிரத்து 546 ரிங்கிட் பெற்றுத் தரப்பட்டது என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் பலத்த கைதட்டலுக்கு இடையே தெரிவித்தார்.
மேலும் பேராக் மாநில அரசின் சார்பில்
ஒரு கோடியே 58 லட்சத்து 87ஆயிரத்து 651 ரிங்கிட் வழங்கப்பட்டது.
பேரா மாநிலத்தில் இந்து கோவில்களுக்கு இவ்வளவு பெரிய மானியம் வழங்கப்படுவது இதுவே வரலாறு சாதனை என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 2:40 pm
பேராக்கில் ஆலயங்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்: டத்தோ சிவநேசன்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
