செய்திகள் மலேசியா
தேசியப் பயிற்சி வாரம் 2026 மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகளைத் திறக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
பெர்மாத்தாங் பாவ்:
தேசியப் பயிற்சி வாரம் 2026 மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகளைத் திறக்கிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மலேசியா உயர் வருமான நாடு என்ற தகுதியை அடையும் முயற்சிகளுக்கு இணங்க, அதிக வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை அதிகமான மக்கள் கைப்பற்றுவதை உறுதி செய்வதற்காக, திறன் மேம்பாடு, பயிற்சி மூலம் மனித மூலதன மேம்பாடு வலுப்படுத்தப்படும்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், புதிய அறிவைப் பெறவும், வேலை சந்தையில் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் ஒரு தளமாக விளங்கும் தேசியப் பயிற்சி வாரம் 2026-ஐ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
உள்நாட்டு, அனைத்துலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை நாடு உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, திறன் மேம்பாடு என்பது இனி ஒரு விருப்பத் தேர்வாக இல்லாமல், ஒரு அவசியமாகிவிட்டது.
உண்மையில், ஒரு நாட்டின் மிக முக்கியமான சொத்து அதன் இயற்கை வளங்கள் அல்ல, மாறாக அதன் மனித வளங்களே ஆகும்.
எனவே, மலேசியா பெரும் வெற்றியை அடைய விரும்பினால், தற்போதைய மற்றும் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள, மக்களுக்குத் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் எப்போதும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரால் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய பயிற்சி வார 2026 உச்ச நிலை மாநாட்டின் தொடக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 2:40 pm
பேராக்கில் ஆலயங்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்: டத்தோ சிவநேசன்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
