செய்திகள் மலேசியா
அஸாம் பாக்கியின் சகோதரர் நிறுவனம் தொடர்புடைய 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம்; அந்தோனி லோக் பதிலளிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
சிரம்பான்:
டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் சகோதரர் நிறுவனம் தொடர்புடைய 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பதிலளிக்க வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.
எம்ஏசிசி முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, தனது சகோதரருடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் தற்போது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்நிலையில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டேன்.
மேலும், இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார்.
தி எட்ஜ் மலேசியா வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு பதிலளித்த அஸாம் பாக்கி, தனது சகோதரரின் வணிக விவகாரங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
இதனிடையே போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள திட்டம் தொடர்பாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
ஆக இவ்விவகாரத்திற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.
ஊழல் இல்லாத ஆட்சி என கூறும் அந்தோனி லோக் இது தொடர்பாக முழு விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இது மக்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 2:40 pm
பேராக்கில் ஆலயங்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்: டத்தோ சிவநேசன்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
