நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கான ஒரே கட்சி மஇகா தான்; சிரம்பான் ஜெயா, ஸ்ரீ தஞ்சோங் தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

போர்ட்டிக்சன்:

இந்திய சமுதாயத்திற்கான ஒரே கட்சி மஇகா தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

ஆக சிரம்பான் ஜெயா, ஸ்ரீ தஞ்சோங் தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இந்த நாட்டில் இந்தியர்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மஇகா பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

இத் திட்டங்கள் வாயிலாக இந்திய சமுதாயம் பயன் பெற்றுள்ளது. ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். இதை நான் மறுக்க மாட்டேன்.

ஆனால் மஇகா எதையுமே செய்யவில்லை என்று யாருமே கூற முடியாது.

இதன் அடிப்படையில் தான் மஇகா மீதான இந்தியர்களின் ஆதரவு திரும்பி வருகிறது.

குறிப்பாக ஜொகூர் மாநிலத்தில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெற்றது.

தற்போது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் இரு சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.

சிரம்பான் ஜெயாவில் தினாளனும் ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதனும் போட்டியிடுகின்றனர்.

மஇகாவின் இந்த இரு வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அதே வேளையில் நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்.

இதற்கு இந்திய வாக்காளர்கள் முழுமையாக தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டும்.

என்ன சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்கான ஒரே கட்சி மஇகா தான்.

இந்திய வாக்காளர்கள் இதை மட்டும் நினைத்துக் கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

போர்ட்டிக்சனில் நடைபெற்ற இந்திய சமூக மக்களுடனான சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset