நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவில் மேற்கொள்ளப்படும் திவேட் பயிற்சித் திட்டங்களின் 20% இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹித்

போர்ட்டிக்சன்:

சீனாவில் மேற்கொள்ளப்படும் திவேட் பயிற்சித் திட்டங்களின் 20% இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

உலகவே இப்போது திவேட் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் தான் மலேசியாவும் இக்கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் நமது மாணவர்களை சீனாவுக்கு அனுப்புகிறது.

சீனாவுக்கு செல்லும் மாணவர்கள் அங்கு திவேட் தொடர்பான தொழில் திறன் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இது நமது மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

சீனாவிற்கு செல்லும் மாணவர்களில் அதிகமான இந்தியர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வரும் காலங்களில் மொத்த எண்ணிக்கையில் 20% இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன்.

போர்ட்டிக்சனில் நடைபெற்ற இந்திய சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஜாஹித் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset