செய்திகள் மலேசியா
ஜொகூர் மந்திரி புசாராக தகுதியான தேசிய கூட்டணி வேட்பாளர்களில் 3 பெயர்களை அஸ்மின் அலி குறிப்பிட்டார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மந்திரி புசாராக பல தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டுள்ளது என்று பெர்சாத்து பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.
தகுதிகள் உள்ள வேட்பாளர்களில் அப்துல் முத்தலிப் அப்த் ரஹீம் லாயாங்-லாயாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
டாக்டர் முகமது மாலிகி முகமது ரபீ (பாரித் ராஜா), முகமட் ராட்ஸி அமின் (புக்கிட் நானிங்) ஆகியோரும் இதில் அடங்குவர்.
பலர் தகுதி பெற்றிருந்தாலும் மந்திரி புசார் குறித்து நாம் முடிவெடுப்பதற்கு முன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
இறுதியாக, நாம் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜொகூர் மாநில அரசின் துணை விதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த முன்மொழிவு சுல்தானின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், நாம் நிலைநிறுத்தி மதிக்க வேண்டியது அந்த அரசியலமைப்புச் சட்டமே என்று நேற்று இரவு டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடன் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
