நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்

ஜம்மு:

ஜம்முவில் கனமழையால் ஏற்பட்டுள்ள மண்சரிவால் ஏராளமான வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.

ஜம்முவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முகலாய சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிர் கி கலி பகுதிக்கு அருகே அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குச் சாலை மூடப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து சேவையும் முழுமையாக முடங்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

இதனால், கார்கள், சரக்கு வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன.

Jammu And Kashmir: Heavy Rain, Flash Floods, And Landslides Hit Normal Life  in Jammu And Kashmir

சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறை இடிபாடுகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் மீட்புக்குழுவினரும், கனரக இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சாலை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, வானிலை மாறும் வரை இந்த வழித்தடத்தில் தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset