செய்திகள் மலேசியா
திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ஐஜேஎன்னில் உள்ளார்; அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்: சபாநாயகர்
கோலாலம்பூர்:
தேசிய இதய நிறுவனத்தில் (ஐஜேஎன்) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹாரிஅப்துல் நினைவூட்டினார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வுக்கு முன்பு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
2023ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு, தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உடல் பரிசோதனைத் திட்டம், சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த ஆண்டும் வழக்கம் போல் தொடரும்.
மாண்புமிகு அவர்களே, தயவுசெய்து இதைக் கவனத்தில் கொண்டு தீவிரமாக இருங்கள்.
நேற்று கூட, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.
அவர் தற்போது ஐஜேஎன்னில் இருக்கிறார். அவர் நலமாக உள்ளார்.
அதன் அடிப்படையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
