செய்திகள் மலேசியா
பெல்டாவை வலுப்படுத்தி அதன் பிரச்சினைகளுக்கு மடானி அரசு தீர்வு காண்கிறது: யுனேஸ்வரன்
புத்ராஜெயா:
பெல்டாவை தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
மடானி அரசாங்கம் பெல்டாவை முழுமையாக மீட்டெடுத்து, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெல்டா குடியேற்றவாசி குடும்பங்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தெளிவான அரசியல் உறுதியைக் கொண்டுள்ளது.
மடானி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அதிகமான கடன் சுமை, நிர்வாகக் குறைபாடுகள், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளின் தாக்கம் காரணமாக பெல்டா பல்வேறு நிதி சவால்களை எதிர்கொண்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும், இந்தப் பிரச்சனைகளை தொடர்ந்து நீடிக்க விடாமல், அவற்றுக்குத் தீர்வு காணும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெல்டா மீட்பு திட்டத்தின் கீழ், 2023-ஆம் ஆண்டு முதல் பெல்டாவின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் 990 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 3.96 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன் மூலம், 1956ஆம் ஆண்டு முதல் கிராமப்புற வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் பெல்டா நிறுவனம் தொடர்ந்து நிலைத்திருக்கவும், குடியேற்றவாசிகளின் நலன் பாதுகாக்கப்படவும், அதன் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட்டை வழங்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிதியைப் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் அல்லது பிற பொது வசதிகளை அமைக்க பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும், கடந்த கால நிர்வாகத் தவறுகளுக்குப் பெல்டா குடியேற்றவாசிகள் பலியாகக் கூடாது என்ற நோக்கில் மடானி அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாக அவர் கூறினார்.
பெல்டாவின் மீட்பு நடவடிக்கை கடன் தீர்வுடன் மட்டும் முடிவடையக் கூடாது.
அடுத்த கட்டமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை பெல்டா மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
