செய்திகள் மலேசியா
உப்சி பல்கலைக்கழகத்தில் மதமாற்ற நடவடிக்கையா?; நிர்வாகம் மறுத்துள்ளது: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
தஞ்சோங் மாலிமில் உப்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மாதம் மாறினால் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை அப்பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
அதற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும அதன் அதிகாரிகள் தம்முடம் தெரிவிந்துள்ளதாக ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
ஈப்போவில் உள்ள அரசு அலுவலகத்தில் வசதி குறைந்த இந்திய மாணவர் மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் இதனைத் தெரிவித்தார்
மேலும் அம்மதிரியான அறிக்கையை மாணவர்கள் தங்கள் கல்வி மீது தொடர்ந்து நாட்டம் செலுத்தும் அந்த பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தொடர்பான தேவைகளுக்கு தாம் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும்.
அவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பேரா அரசு 20 ஆயிரம் நிதி ரிங்கிட் வழங்கியதை நினைவுக் கூர்ந்தார்.
உப்சி பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 100 மாணவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி, உதவி கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
இது மாணவர்களின் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க பரிலிக்கப்படும் என்றார்.
கம்பாரில் புதிய மருத்துவமனை அமைக்கும் திட்டத்திற்கு மாநில அரசு முழு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக மாநில சுகாதார, மனிதவள, ஒற்றுமைக்கு துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினருமான் டத்தோ அ. சிவநேசன் தகவல் கூறினார்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கம்பார் புதிய மருத்துவமனைத் திட்டம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.
கம்பாரில் புதிய மருத்துவமனை கட்டுவது தொடர்பான முடிவு கடந்த 2026 ஜூன் 10 அன்று மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், அந்தத் திட்டம் 13-ஆவது மலேசிய திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனை கட்டுவதற்காக செங்காட் பாரு பகுதியில் உள்ள 11 லோட் நிலத் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான இழப்பீடாக 506,190 ரிங்கிட் தொகை 12 நில உரிமையாளர்களுக்கு 2026 ஜூன் 15 அன்று முழுமையாக வழங்கப்பட்டது.
தற்போது அந்த நிலம் மருத்துவமனை கட்டுமானத்திற்காக மத்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்காக 456.95 மில்லியன் ரிங்கிட் மருத்துவ உபகரணங்கள், பிற வசதிகளுக்காக 44.55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
