நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான மக்கள் வாக்களிக்க வந்தால் மட்டுமே வலுவான ஆணையை பெற முடியும்: மஸ்லி மாலிக்

ஜொகூர்பாரு:

தேர்தலில் அதிகமான மக்கள் வாக்களிக்க வந்தால் மட்டுமே வலுவான ஆணையை பெற முடியும்.

புத்ரி வங்சா தொகுதிக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் மஸ்லி மாலிக் இதனை கூறினார்.

வரும் சனிக்கிழமையன்று ஜொகூர் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வெளியே வர வேண்டும்.
அதிக வாக்காளர்கள் வாக்களித்தால் மட்டுமே புதிய மாநில அரசுக்கு வலுவான ஆணையை வழங்கும்.

80 முதல் 90% வரையிலான வாக்காளர்  வாக்களித்தால், மக்களின் உண்மையான ஆணையை சிறப்பாகப் பிரதிபலிக்கும்.

ஒரு ஜனநாயக அமைப்பில், ஒரு வாக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. வாக்குகள் மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கின்றன.

எவ்வளவு அதிகமான மக்கள் வாக்களிக்க வருகிறார்களோ, அந்த அளவிற்கு ஆணை வலுப்பெறும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset