நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027- 2030ஆம் ஆண்டுகளுக்கான நிதித்துறை முதன்மை திட்டம்: பேங்க் நெகாரா மலேசியா உருவாக்கி வருகிறது 

கோலாலம்பூர்- 

2027-2030ஆம் ஆண்டுகளுக்கான நிதித்துறை முதன்மை திட்டம் குறித்து பேங்க் நெகாரா மலேசியா உருவாக்கி வருகிறது என்று பி.என்.எம் கவர்னர் டத்தோஶ்ரீ அப்துல் ரஷிட் கஃபூர் கூறினார். 

உண்மையான சவால்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதையும், பொருளாதாரத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதையும் உறுதி செய்வதற்காக, தொழில்துறை, அரசாங்கம் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்

தற்போது, ​​மலேசியாவில் உள்ள 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதிச் சேவை வழங்குநர்கள், குறைந்தபட்சம் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை நடைமுறைப்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். 

மலேசியாவில் உள்ள நிதி நிறுவனங்கள், நிறுவனத்திற்கு மதிப்பு சேர்க்கக்கூடிய செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இருப்பினும், ஒரு நிறுவனம் தனியாகத் தீர்க்க முடியாத சவால்களைச் சமாளிக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே அடுத்த கட்டம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, AICB NEXUS 2026 மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு டத்தோஶ்ரீ அப்துல் ரஷிட் கஃபூர் தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset