நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வணிக வளாகங்களில் உள்ள சூராவ், தொழுகைக் கூடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை: சிலாங்கூர் சுல்தான்

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களில் இருக்கும் எந்தவொரு சூராவ், தொழுகைக்கூடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி வழங்கவில்லை.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவர் டத்தோ சலாஹுடின் சைடின், தொழுகைக்கூடங்கள் அல்லது சூராவ்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கான அனுமதி உட்பட, இஸ்லாமிய சமய நிர்வாகம் தொடர்பான விவகாரங்களைத் தீர்மானிப்பதில், சிலாங்கூரின் இஸ்லாமிய சமய விவகாரங்களின் தலைவர் என்ற முறையில் தனக்குள்ள சிறப்புரிமைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

நாடு தழுவிய வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை அறைகளை அமைப்பதற்கான மத்திய அரசின் முன்மொழிவை வரவேற்றாலும், சிலாங்கூரில் அதன் அமலாக்கம் மாநில சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டது.

நாடு தழுவிய வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை அறைகளை அமைப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து, பிரதமர் துறையின் மத விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் சூல்கிப்லி ஹசான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை மன்றம் கவனத்தில் கொள்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset