செய்திகள் மலேசியா
பெரிக்காத்தான் நேஷனல் ஜொகூர் மாநிலத்தில் மாநில அரசாங்கத்தை அமைக்க இயலாது: டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஒப்புக்கொண்டார்
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜொகூரில் மாநில அரசாங்கத்தை அமைக்காது என்று பெர்சத்து கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், வாக்காளர்கள் வலுவான ஆதரவினை பெரிக்காத்தான் நேஷனல் வழங்க வேண்டும் என்றும் இதனால் மாநில சட்டமன்றத்தில் அக்கூட்டணியின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மாநில அரசாங்கத்தை அமைக்காவிட்டாலும் ஜொகூரில் ஒரு வலுவான எதிர்கட்சியாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியால் இருக்க முடியும்.
ஒருவேளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கூடுதலான இடங்களைப் பெற்றால் மாநில அரசாங்கம் அவர்கள் இஷ்டம் போல் செயல்பட முடியாது என்று அவர் சொன்னார்.
முன்னதாக, பெர்சத்து ஜொகூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டா டான்ஶ்ரீ முஹிடின் யாசின்
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜொகூர் மாநில தேர்தலில் 33 இடங்களில் போட்டியிடுகிறது. அவற்றில் பெர்சத்து கட்சி 20 இடங்களிலும் பாஸ் கட்சி 11 இடங்களிலும் கெராக்கான் கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
