செய்திகள் மலேசியா
நண்பகல் வரை நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய வாய்ப்பு
கோலாலம்பூர்-
தீபகற்ப மலேசியாவின் சில மாநிலங்களிலும் சரவாக் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய மழை பொழியும் என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
கெடாவில் கோல மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு பகுதிகளிலும் பினாங்கு மாநில முழுவதும் இந்த வானிலை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் கெரியான், லாருட் மாத்தாங், மஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழியும் வேளையில் பகாங்கில் ரொம்பின் பகுதியில் கனமழை பொழியும் என்று தெரிவிக்கப்படது.
சரவாக் மாநிலத்திலும் சபா மாநிலத்திலும் சில உட்புற பகுதிகளில் இந்த வானிலை நண்பகல் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்கள் குறித்து பொதுமக்கள் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று மெட் மலேசியா தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
