நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஓய்வு 

பிரேசிலியா- 

அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் அணியின் நட்சத்திரம் நெய்மார் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

பிரேசில் அணி நொர்வே அணியிடம்  2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டதைத் தொடர்ந்து நெய்மார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

34 வயதான நெய்மார் பிரேசில் அணியின் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

பிரேசில் அணியின் இறுதி நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பினை கோல்லாக்கியும் பிரேசில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 

2023ஆம் ஆண்டுக்குப் பிறகு நெய்மார் மீண்டும் பிரேசில் அணிக்காக நொர்வே ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset