செய்திகள் விளையாட்டு
ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டி: நாளை வரலாறு படைக்குமா போர்த்துகல் அணி ?
வாஷிங்டன் -
2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் நாளை இரு பலம் பொருந்திய அணிகள் மோதுகின்றன.
2016ஆம் ஆண்டு யூரோ கிண்ண வெற்றியாளரான போர்த்துகல் அணியும் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண சாம்பியனான ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.
அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால் ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் அனல் பறக்கும் ஆட்டமாக விளங்குகிறது.
ஸ்பெயின் அல்லது போர்த்துகல் அணிகள் ஏதேனும் ஒன்று வெற்றிப்பெற்றால் அவர்கள் பெல்ஜியம் அல்லது அமெரிக்கா அணிகளை காலியுறுதி சுற்றில் சந்திப்பார்கள் .
மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.
போர்த்துகல் சார்பாக கிரிஸ்டியானோ ரொனால்டோவும் ஸ்பெயின் சார்பாக லமின் யமாலும் கோல்கள் புகுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 11:31 am
உலகக் கிண்ணம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 6, 2026, 10:44 am
அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஓய்வு
July 6, 2026, 10:42 am
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி தனது இறுதி போட்டியாகும்: கிரிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
July 6, 2026, 9:08 am
அன்சிலோட்டியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி பிரேசில் ரசிகர்கள் கொந்தளிப்பு
July 6, 2026, 9:08 am
பிரேசில் கதையை முடித்த ஹாலண்ட்: உலகக் கிண்ண போட்டியில் நார்வே அபார வெற்றி
July 5, 2026, 10:02 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
July 5, 2026, 9:48 am
உலகக் கிண்ண காலிறுதி சுற்றில் மொராக்கோ: வெளியேறியது கனடா
July 4, 2026, 2:17 pm
