செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
மெக்சிகோ சிட்டி:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி மெக்சிகோவை பேராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மெக்சிகோ சிட்டியில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் மெக்சிகோ, இங்கிலாந்தை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த மோதலில் வலுவான இரு அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இரு அணிகளும் அடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியன.
அப்போது ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து 38ஆவது நிமிடத்தில் மீண்டும் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய மெக்சிகோ, இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போது ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஜுலியன் கினோனெஸ் கோல் அடித்து முன்னிலையை குறைத்தார்.
இதனால் முதல் பாதி 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
பிற்பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதை அற்புதமாக பயன்படுத்திய ஹாரி கேய்ன் தனது முதல் கோலை பதிவு செய்தார்.
ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் ரவுல் ஜிமெனெஸ் கோலாக மாற்றினார்.
இதன் மூலம் 1 கோல் மட்டுமே இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சியில் ஈடுபட ஆட்டம் சூடு பிடித்தது.
ஆனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனால் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவை வெளியேற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 5:17 pm
ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டி: நாளை வரலாறு படைக்குமா போர்த்துகல் அணி ?
July 6, 2026, 10:44 am
அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஓய்வு
July 6, 2026, 10:42 am
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி தனது இறுதி போட்டியாகும்: கிரிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
July 6, 2026, 9:08 am
அன்சிலோட்டியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி பிரேசில் ரசிகர்கள் கொந்தளிப்பு
July 6, 2026, 9:08 am
பிரேசில் கதையை முடித்த ஹாலண்ட்: உலகக் கிண்ண போட்டியில் நார்வே அபார வெற்றி
July 5, 2026, 10:02 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
July 5, 2026, 9:48 am
உலகக் கிண்ண காலிறுதி சுற்றில் மொராக்கோ: வெளியேறியது கனடா
July 4, 2026, 2:17 pm
