நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எனக்கு முன்பு, போர்த்துகல் எந்தப் பட்டத்தையும் வென்றதில்லை: ரொனால்டோ

ஆர்லிங்டன்:

எனக்கு முன்பு, போர்த்துகல் எந்தப் பட்டத்தையும் வென்றதில்லை என்று அதன் ஜாம்பவான் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறினார்.

 2026 உலகக் கிண்ண போட்டியே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டபோதிலும், போர்த்துகல் அணியுடனான தனது எதிர்காலம் குறித்து அவசர முடிவு எடுக்க அவர் மறுத்துவிட்டார்.

மாற்று வீரரான மிக்கேல் மெரினோவின் கடைசி நேர கோலால் ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போர்த்துகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. 

இதன்மூலம், உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு முடிவுக்கு வந்தது.

41 வயதான ரொனால்டோ, ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கக்கூடிய ஒரு போட்டியின் இறுதி நிமிடங்களில், ஸ்பெயின் அணி வெற்றி கோலை அடித்தது சற்று அதிர்ஷ்டம் என்று கூறினார்.

உலகக் கிண்ணத்தை இந்த வழியில் விட்டுச் செல்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எனது முழு முயற்சியையும் கொடுத்தேன். 

அமைதியான மனதுடன் இந்த போட்டியில் இருந்து விடைபெறுகிறேன்.

ஆம், இதுதான் எனது கடைசி உலகக் கிண்ணம். ஆனால், நான் சிந்திப்பதற்கும் என் குடும்பத்துடன் இருப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்வேன். 

நான் எந்த அவசர முடிவுகளையும் எடுக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

இருப்பினும், தனிப்பட்ட முடிவுகள் அணியின் மீதான கவனத்தை மறைக்க அனுமதிக்க மறுத்த ரொனால்டோ, இந்தப் போட்டிதான் போர்ச்சுகல் அணிக்காக அவர் ஆடும் கடைசிப் போட்டியாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

நான் உணர்ச்சிவசப்படும்போது முடிவுகளை எடுப்பதில்லை என்று அவர் கூறினார்.

குறிப்பாக நான் போர்த்துக்கலுடன் மூன்று பட்டங்களை வென்றேன். 

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முன்பு, போர்த்துகல் எந்தப் பட்டத்தையும் வென்றதில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset