செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் போர்த்துகலை வீழ்த்தியது ஸ்பெயின், கண்ணீருடன் வெளியேறினார் ரொனால்டோ
டல்லாஸ்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் பரபரப்பான சுற்று 16இல் போர்த்துகல் அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மெரினோ அடித்த கோல், போர்த்துகல் அணியின் உலகக் கிண்ண கனவை சுக்குநூறாக உடைத்தது.
அமெரிக்காவின் டல்லாஸ் அரங்கில் நடந்த இந்த நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடினார்.
முதல் பாதியில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான மல்லுக்கட்டு நடந்த போதிலும், கோல் எதுவும் விழவில்லை.
இரண்டாம் பாதியிலும் ஆட்டம் சமநிலையை நோக்கியே சென்றது. இதனால் போட்டி கூடுதல் நேரத்திற்கு செல்லலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
போட்டியின் கூடுதல் நேரத்தில்(90+1வது நிமிடம்) ஸ்பெயின் அணிக்கு ஒரு ப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது.
போர்த்துகல் வீரர்கள் சுதாரிப்பதற்குள், பெரான் டோரஸ் கொடுத்த பாஸை கச்சிதமாகப் பயன்படுத்திய மைக்கேல் மெரினோ, பந்தை மின்னல் வேகத்தில் கோல் கம்பத்திற்குள் அடித்தார்.
அரங்கமே அதிரும் வகையில் ஸ்பெயின் ரசிகர்கள் இந்த வெற்றிக் கோலைக் கொண்டாடினர்.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் திரில் வெற்றி பெற்றது.
அதிர்ச்சியடைந்த போர்த்துகல் அணி வீரர்கள் அரங்கத்திலேயே நிலைகுலைந்து போயினர்.
போர்த்துகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது உலகக் கிண்ண கனவு பறிபோனதை எண்ணி அரங்கத்திலேயே சோகத்தில் ஆழ்ந்தார்.
இத்துடன் அவரது உலகக் கிண்ண பயணம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
