நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அண்டை வீட்டுக்காரர் குளிப்பதை படமெடுத்த இளைஞருக்கு 3500 ரிங்கிட் அபராதம் விதிப்பு 

பெட்டாலிங் ஜெயா- 

அண்டை வீட்டுக்காரரர் ஒருவர் குளிப்பதை வீடியோ படமெடுத்த 19 வயது இளைஞர் ஒருவருக்கு இங்குள்ள ஆயர் கெரோ மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் 3500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது 

குற்றஞ்சாட்டப்பட்ட ஷஃபிக் ஹிடயாத் சுக்கூர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. 

ஒருவேளை அபராதத் தொகை செலுத்தவில்லை என்றால் ஆறு மாதங்களுக்கு சிறையில் வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

அவர் இந்த குற்றச்சாட்டை கடந்தாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பத்து பெரெண்டாம் எனும் பகுதியில் புரிந்தார் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 509யின் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது இந்த குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழிவகை செய்யப்படும். 

இருப்பினும், துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர் அலியா சஃப்ரி, அவரது செயல்கள் பாதிக்கப்பட்டவரின் மானபங்கத்திற்கு காரணமாகிவிட்டதாகக் கூறி, கடுமையான தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset