நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில தேர்தல் முடிவு இரவு 10 மணிக்குத் தெரியவரலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல் 

குளுவாங்- 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வாக்களிப்பு நாள் நிறைவடைந்து இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படலாம் என்று மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹருன் கூறினார். 

வாக்குகள் எண்ணப்பட்டு நிறைவடைந்தவுடன் முழு முடிவுகளும் மொத்தமாக அறிவிக்கப்படும். 

நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே மாநில தேர்தல் முடிவுகள் தெரியவரலாம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் முறையே ஜூலை 11ஆம் தேதி தங்களின் ஜனநாயக கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

மொத்தமுள்ள 56 சட்டமன்ற இடங்களுக்கும் அரசியல் கட்சிகள் வெற்றிப் பெற களம் கண்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset