நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பசுமை வளர்ச்சி பொருளாதார உச்சிமாநாடு: மலேசியாவைப் பிரதிநிதித்து டத்தோஶ்ரீ எம், சரவணன் அவர்கள் கலந்து சிறப்பிப்பு

ஹைதரபாத்:

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2026 பசுமை வளர்ச்சி பொருளாதார உச்சி மாநாட்டில்  ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்கள் கலந்து கொண்டார்.

“கட்டமைப்பை பசுமையாக்குதல்: உள்கட்டமைப்பு, புத்தாக்கம், தூய்மையான ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் மலேசியாவை பிரதிநிதித்து ஒரு குழு பேச்சாளராக டத்தோஶ்ரீ எம்.சரவணன் பங்கெடுத்துள்ளார்

செயற்கை நுண்ணறிவு உலகளாவிய முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் அதே வேளையில், நமது பொறுப்பும் சம அளவில் தெளிவாக உள்ளது.

மீள்திறன் கொண்ட, நிலையான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஆற்றல் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

மேலும், தொழில்நுட்பம் புத்தாக்கத்தை இயக்கலாம், ஆனால் வலுவான கொள்கைகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் மட்டுமே நாம் எவ்வளவு தூரம் பயணிப்போம் என்பதைத் தீர்மானிக்கும்.

ஒத்துழைப்பு, புத்தாக்கம், பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றத்தை வழிநடத்துவதற்கான மகத்தான திறனை உலகளாவிய தெற்கு நாடுகள் கொண்டுள்ளன என்று டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்

எனவே, எதிர்காலம் வெறும் செயற்கை நுண்ணறிவால் (AI) மட்டும் இயக்கப்படுவதில்லை. இன்று நாம் எடுக்கும் தேர்வுகளால் அது இயக்கப்படுகிறது என்று டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறினார். 

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset