செய்திகள் மலேசியா
மித்ரா மூலம் 168 ஆலயங்களுக்கு 3.36 மில்லியன் நிதி; 4,000 சிறுவர்களின் கல்விக்கு விடிவு: டத்தோஸ்ரீ ரமணன்
சிரம்பான்:
இந்திய சமூகத்தின் ஆன்மீக அடையாளத்தைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும் மடானி அரசாங்கம் இன்று களமிறங்கியுள்ளது.
சிரம்பான் விஸ்மா சிலோனீஸில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 168 இந்து ஆலயங்களுக்கான 3.36 மில்லியன் நிதியுதவியையும், 4,000 பி40 குடும்பக் சிறுவர்களுக்கான கல்வி மானியத் திட்டத்தையும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று நேரில் வழங்கித் தொடங்கி வைத்தார்.
தரைமட்டத்திலிருந்து சமூகத்தை உயர்த்துவதே மடானி அரசின் இலக்கு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று அமைச்சர் விநியோகித்த இந்த நிதியுதவிகள், வெறும் வார்த்தைகளாக இல்லாமல் மக்களின் கைகளில் சேரும் நேரடி நிவாரணமாக அமைந்தன.
4 முதல் 6 வயதுடைய 4,000 சிறுவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் சிறந்து விளங்க, தலா 230 ரிங்கிட் (150 ரிங்கிட் கல்வி கட்டணம் + 80 ரிங்கிட் உணவுத் தொகை) மாதந்தோறும் வழங்கும் இந்தத் திட்டம், ஏழை மாணவர்களின் கல்விப் பாதையில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
அதேபோல், ஆன்மீகத்தின் ஊற்றுக் கண்களான ஆலயங்களை வலுப்படுத்துவதில் அரசு காட்டும் உறுதிக்கு, இன்று வழங்கப்பட்ட இந்த 3.36 மில்லியன் நிதி ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இதுவரை மொத்தம் 627 ஆலயங்களுக்கு 12.54 மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ள மடானி அரசு, ஆலயங்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், சமூக மேம்பாட்டின் மையங்களாக மாற்றும் தனது தொலைநோக்குப் பார்வையை இன்று மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த நிதியை ஒரு ‘தர்ம காரியம்’ என உணர்ந்து, மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாள வேண்டும் என்று ஆலய நிர்வாகிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மனிதவள அமைச்சின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ஹாஜி முகமது ஷஹாரின பின் உமர், மித்ரா தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், சட்டமன்ற உறுப்பினர்களான அருள் குமார் மற்றும் குணசேகரன், செனட்டர் தியாகராஜா ராஜகோபால் மற்றும் நெகிரி செம்பிலான் கெஅடிலான் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த 2023 முதல் மடானி அரசு இந்திய சமூகத்திற்காகச் செய்துள்ள சேவைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அது ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு.
2025-ஆம் ஆண்டில் மட்டும் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா திட்டங்கள் மூலம் இந்தியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ள 1 பில்லியன் நிதி, இந்த அரசாங்கத்தின் உண்மையான கரிசனத்திற்குச் சான்றாகும்.
"தர்மத்தைப் பின்பற்றினால் தெய்வம் துணை நிற்கும்" என்று கூறிய அமைச்சர் ரமணன், சமூகத்தைப் பிளவுபடுத்தும் வதந்திகளைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டை வளப்படுத்தும் மடானி அரசின் இந்த நீண்டகாலப் பயணத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
