செய்திகள் மலேசியா
இந்திய சமுதாய உருமாற்றத்திற்கான மித்ரா நிதி மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்: அந்தோனி லோக்
சிரம்பான்:
இந்திய சமுதாய உருமாற்றத்திற்கான மித்ரா நிதி மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
மடானி அரசாங்கத்தின் கீழ் மித்ராவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
ஆனால் இந்நிதி போதாது என கூறி மனிதவள அமைச்சரும் மித்ராவிற்கு தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் அதனை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தினார்.
இந்நிதியை ஒதுக்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவொரு நல்ல முயற்சியாகும். காரணம் இந்நிதி முழுமையாக இந்திய சமுதாய உருமாற்றத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இந்நிதியை மேலும் அதிகரித்தால் கூட எந்தவொரு தவரும் இல்லை.
ஆக இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவையிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
சிரம்பானில் நடைபெற்ற தமிழ் பாலர்பள்ளிகளுக்கும் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நிதி வழங்கும் நிகழ்வில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியர்கள் தொடர்பான திட்டங்களின் மித்ராவுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து அமைச்சு தயாராக உள்ளது.
இது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
