செய்திகள் இந்தியா
கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 6 மாணவிகளை மிரட்டி பலாத்காரம்: கேரள கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 99 வருடம் சிறை
திருவனந்தபுரம்:
பயிற்சிக்கு வந்த 6 மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கேரள கிரிக்கெட் சங்க முன்னாள் பயிற்சியாளருக்கு 3ஆவது வழக்கில் 48 வருடம் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்ட 3 வழக்குகளில் இவருக்கு மொத்தம் 99 வருடம் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மனு (40). இவர் கேரள கிரிக்கெட் சங்க பெண்கள் அணி பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 6 மாணவிகளை இவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அந்த மாணவிகளை அவர் ஆபாச வீடியோ மற்றும் போட்டோவும் எடுத்துள்ளார். வெளியே யாரிடமாவது சொன்னால் கிரிக்கெட் பயிற்சி செய்ய விடமாட்டேன் என்று மிரட்டி இருந்ததால் இந்த மாணவிகள் பயந்து யாரிடமும் சொல்லாமல் இருந்தனர். இதற்கிடையே சில வருடங்கள் கழித்து இந்த 6 மாணவிகளும் வேறு இடத்திற்கு பயிற்சிக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் பயிற்சியாளர் மனுவால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கடந்த இரு வருடங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அந்தப் போட்டிக்கு பயிற்சியாளர் மனுவும் வந்தார். அவரைப் பார்த்ததும் அந்த மாணவி பயந்து அழத் தொடங்கினார். அப்போதுதான் மனு அந்த மாணவியை பலாத்காரம் செய்த விவரம் வெளியே தெரியவந்தது.
தொடர்ந்து அந்த மாணவி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் பின்னர் மற்ற 5 மாணவிகளும் பயிற்சியாளர் மனுவுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து மனுவை கேரள கிரிக்கெட் சங்கம் டிஸ்மிஸ் செய்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணை திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 4 வழக்குகளில் சமீபத்தில் விசாரணை முடிவடைந்தது.
இதில் கடந்த மாதம் முதல் வழக்கில் மனுவுக்கு 16 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி இரண்டாவது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த வழக்கில் மனுவுக்கு 35 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.66 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவித்த பின்னர்தான் 2வது வழக்கிற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அஞ்சு மீரா பிர்லா தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மூன்றாவது வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மனுவுக்கு 48 வருடம் கடுங்காவல் சிறையும், 79 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. முதல் 2 வழக்குகளில் தண்டனையை அனுபவித்த பின்னரே 3வது வழக்கில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி அஞ்சு மீரா பிர்லா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 3 வழக்குகளிலும் சேர்த்து இவருக்கு மொத்தம் 99 வருடம் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
