செய்திகள் இந்தியா
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
புது டெல்லி:
தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையான அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் சுமாா் 18,500 அடி உயரத்தில் உள்ள சிவபெருமானின் உறைவிடமாக கருதப்படும் கைலாஷ் மலையையும் அதையொட்டிய புனிதமான மானசரோவா் ஏரியையும் தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
கடந்த 2020-இல் கரோனா பரவலால் முதலில் நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் 5 ஆண்டுகள் வரை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
‘தனியாா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மூலம் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்கள், அந்த ஏற்பாட்டாளா்கள் முறையாக பதிவு செய்தவா்களா, அங்கீகாரம் பெற்றவா்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களும் பெறும் வரை யாத்திரையைத் தொடங்கக் கூடாது’ என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
