நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்கள் தங்கள் முடிவை எடுக்க திறந்த மனதோடு விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்: மஸ்லி மாலிக்

ஜொகூர்பாரு:

வரும் சனிக்கிழமை நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த மிகவும் தகுதியானவர் யார் என்பதைத் தீர்மானிக்கவும், பல்வேறு கருத்துக்களைக் கேட்கவும், தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்தவும் திறந்த மனதோடு விவாதங்களை வாக்காளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் மஸ்லி மாலிக் இதனை வலியுறுத்தினார்.

புத்ரி வங்சா மாநிலத் தொகுதிக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர், சில வாக்காளர்களின் மீது அச்சமும் தவறான புரிதல்களும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதை தனது பிரச்சாரம் காட்டுவதாகக் கூறினார்.

ஒருவர் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறார்.

ஆனால் கூட்டணியை ஆதரித்தால் பள்ளி பணியாளராக இருக்கும் தனது மகள் இடமாற்றம் செய்யப்படுவார் என்று கவலைப்பட்ட ஒரு முன்னாள் படை வீரரின் மனைவியுடனான தனது சந்திப்பை முன்னாள் கல்வியமைச்சர் நினைவு கூர்ந்தார்.

நான் அவளிடம், நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாது என்று சொன்னேன்.

வாக்காளர்களிடையே அச்சம் நிலவுகிறது. 

மேலும், நம்பிக்கை கூட்டணி கூட்டரசு அரசாங்கத்தின் ஒரு பகுதி என்பதை அந்தப் பெண்ணிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset