செய்திகள் உலகம்
BREAKING NEWS: இலங்கை சிறையில் கைதிகள் மோதல்: 26 பேர் உயிரிழந்தனர்: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
கொழும்பு:
இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் நேற்றும் இன்றும் நிகழ்ந்த கைதிகளின் மோதலில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியுள்ளது.
இதில் இரு கைதிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்றும் மோதல் வெடித்தது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 6 பேர் சிறை அதிகாரிகள், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், 13 பேர் காவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோதல் காரணமாக சிறைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
