செய்திகள் உலகம்
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
காபோ வெர்ட்:
சீன நாட்டவரின் கவனத்தை ஈர்க்கும் புதிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது காபோ வெர்ட் (Cape Verde).
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தனது அபார ஆட்டத்தினால் ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாகக் காபோ வெர்ட் மாறியது.
"இதுவரை கேள்விப்படாத ஒரு நாடு. உலகக் கிண்ணப் போட்டி காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரமாகிவிட்டது," என்று சீன இணையவாசிகள் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.
காபோ வெர்ட்டின் தலைநகர் பிரயாவுக்கு (Praia) விமானத்தில் செல்வது குறித்து இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல் எண்ணிக்கை கிட்டத்தட்ட 180 மடங்கு அதிகரித்துள்ளது என்று சீன ஊடகங்கள் தெரிவித்தன.
குறிப்பாகப் பெய்ஜிங், ஷங்ஹாய், குவாங்சோ (Beijing, Shanghai, Guangzhou) நகர மக்கள் அதிகளவில் அது பற்றிய தகவல்களைத் தேடியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க வட்டாரத்தில் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கும் காபோ வெர்ட் கடந்த ஆண்டு சுமார் 1.24 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்றது.
அழகிய கடற்கரைகளும், இயற்கைக் காட்சிகளும் கொண்டுள்ள அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 500,000.
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
