செய்திகள் உலகம்
அமெரிக்காவில் விரைவில் நேருக்கு நேர் சந்திப்பு: நெதன்யாகு - டிரம்ப் முக்கிய ஆலோசனைக்கு ஒப்புதல்
பைத்துல்மக்டீஸ்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, விரைவில் அமெரிக்காவில் நேருக்கு நேர் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பிராந்திய பாதுகாப்பு, போர் நிறுத்த முயற்சிகள் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரையாடலின் போது, உலகளாவிய சுதந்திரம், பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவின் பங்கை நெதன்யாகு பாராட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவு தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
மேலும், அமெரிக்க சுதந்திர தினத்தின் 250-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு டிரம்புக்கு நெதன்யாகு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதற்கிடையில், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த சில வாரங்களாக டிரம்ப், நெதன்யாகுவை வெளிப்படையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
