செய்திகள் உலகம்
“நான் இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது”: இந்திரா நூயி
வாஷிங்டன்:
பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் தம்மால் பெரு நிறுவனத்தின் சிஇஓ ஆகியிருக்க முடியாது என்று கூறினார்.
‘‘இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது. ஏனெனில் தகுதிக்கு முக்கியத்துவம் அளிப்பது அமெரிக்க நடைமுறையாக உள்ளது. இங்குள்ள வழிகாட்டிகள் நீங்கள் ஆணா, பெண்ணா, என்ன இனம், என்ன பாலினம் என்று பார்க்க மாட்டார்கள். சிறந்த மூளை உள்ளவர்கள் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்’’ என்று பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி கூறினார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸுடன் கலந்துரையாடிய போது இவ்வாறு கூறினார்.
மேலும், குடியேறியவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்புகள் வேறு எங்கும் கிடைக்காதவை. உலகின் மிகச்சிறந்த நாடு அமெரிக்கா என்றும் அவர் புகழ்ந்துரைத்தார். இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்திரா நூயியின் இந்த கருத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
