செய்திகள் மலேசியா
தேசிய முன்னணிக்கு பாஸ் ஆதரவு; அரசியல் ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்காது: ஜாஹித்
லெடாங்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் கூட்டணியின் வேட்பாளருக்கு பாஸ் அளிக்கும் ஆதரவு, இதற்குப் பிறகு எந்தவொரு ஒத்துழைப்புக்கும் உத்தரவாதம் அளிக்காது.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
இருப்பினும் தேசியக் கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் மஇகா, மசீச வேட்பாளர்களுக்கு பாஸ் அளித்த ஆதரவு உட்பட, பாஸ் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.
அது பாஸ் தலைமையின் ஆதரவு, அந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
அந்த ஆதரவு, அம்னோ செய்யவிருக்கும் அல்லது செய்துள்ள ஒத்துழைப்பை, குறிப்பாக பாஸுடன் செய்துள்ள ஒத்துழைப்பைப் பாதிக்கும் என்று நாங்கள் கருதவில்லை.
நாங்கள் அவர்களின் நிலைப்பாட்டை மதிக்கிறோம்.
மேலும் அந்த ஆதரவு ஜூலை 11 அன்று திறக்கப்படவுள்ள வாக்குச்சீட்டுகளில் உண்மையாகவே பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்.
சீன சமூகத்தினருடன் ஒரு நட்புறவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
