செய்திகள் மலேசியா
சேமிப்பையும் முதலீட்டையும் பாதிக்கும் வகையில் தங்கத்திற்கு புதிய வரிகளை அரசு விதிக்கக்கூடாது: டத்தோ அப்துல் ரசூல்
சுபாங்:
மக்களின் சேமிப்பையும் முதலீட்டையும் பாதிக்கும் வகையில் தங்கத்திற்கு புதிய வரிகளை அரசு விதிக்கக்கூடாது.
மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் இதனை கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர் சங்கத்தின் 31ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று சுபாங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேராளர்கள் பரவலாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் மக்கள் நகைகளை வாங்கி சேமித்தனர்.
தற்போது தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து விட்டது. இது மக்களுக்கு லாபத்தை வழங்கியது.
இது தான் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பயனாகும்.
ஆகையால் மக்கள் இனியும் தயங்காமல் தங்கத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் நடக்கும் போரால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதே வேளையில் துபாயில் இருந்து பல தங்க வணிகர்கள் தற்போது மலேசியாவுக்கு வந்துள்ளனர்.
அவர்களின் வருகை இங்குள்ள மக்களுக்கு நிலையான தரமான தங்கம் கிடைக்கும்.
மேலும் நாட்டின் பொருளாதாரமும் மேம்பாடு காணும்.
இந்தவொரு சூழ்நிலையில் தங்கத்திற்கு புதிய வரிகளை அரசு விதிக்கக்கூடாது. இப்புதிய வரிகள் மக்களுக்கும் வணிகர்களுக்கும் தான் சுமையாக இருக்கும்.
ஆகவே இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 9:34 pm
தேசிய முன்னணிக்கு பாஸ் ஆதரவு; அரசியல் ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்காது: ஜாஹித்
July 5, 2026, 9:33 pm
