நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் கோரிக்கைகளையும் தேசிய முன்னணி தொடர்ந்து பூர்த்தி செய்யும்: ஜாஹித்

பெர்லிங்:

இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் கோரிக்கைகளையும் தேசிய முன்னணி தொடர்ந்து பூர்த்தி செய்யும்.

தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.


கடந்த காலங்களில் இருந்து இந்திய சமுதாயத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் தேசிய முன்னணி செய்து வருகிறது.

இருந்தாலும் சில காலக்கட்டத்தில் பொய்யான பிரச்சாரங்களால் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பியது.

இதனால் வேறு கட்சிகளை நம்பி இந்திய சமுதாயம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

ஜொகூர் மாநில தேசிய முன்னணி அரசு மானியம் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் சமமான வாய்ப்பை இந்திய சமுதாயத்திற்கு வழங்குகிறது.

இதே போன்று தான் தேசிய ரீதியிலும் சம வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

திவேட் தலைவராக இருக்கும் நான் அதிகமான மாணவர்களை சீனாவிற்கு பயிற்சிகளுக்காக அனுப்பியுள்ளேன்.

இப்படி எந்தவொரு பாகுபாடும் இன்றி இந்திய சமுதாயத்திற்கு தேசிய முன்னணி சேவையாற்றி வருகிறது.

ஆக இந்திய சமுதாயம் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset