நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; கிந்தா வட்டாரத்தில் உள்ள ஆலய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்: டத்தோ சிவநேசன்

தம்பூன்:

கிந்தா வட்டாரத்தில் உள்ள ஆலய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.

பேரா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், உலு கிந்தா தஞ்சோங் ரம்புத்தானில் அமைந்துள்ள ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

இது ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் ஆகும்.

இந்த விழாவில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் டத்தோ சிவநேசன், உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமத் அரப்பாட்,  தம்பூன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரி சுரேஷ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்நதனர்.

இந்த ஆலயம் சுமார் 3 லட்சம் ரிங்கிட் செலவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தின் திருப்பணியுடன் கும்பாபிஷேக விழாவை வெற்றிகரமாக நடத்திய ஆலய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள்.

மேலும் கிந்தா வட்டாரத்தில் உள்ள ஆலய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.

இதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கோள்வேன் என்று டத்தோ சிவநேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset