நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ அசோஜன்

ஜொகூர்பாரு:

ஜொகூர் பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை முன்னிட்டு தற்போது அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலில் பெர்லிங் ஒரு கடும் போட்டி நிறைந்த தொகுதியாக உள்ளது..

தேசிய முன்னணி வேட்பாளர் பன்னீர் செல்வம், நம்பிக்கை கூட்டணியிடம் இருந்து இந்த இடத்தை கைப்பற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும் எனது தலைமையிலான தேர்தல் அமைப்பு, சில செயல்பாட்டு மண்டலங்களாக வியூகரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவும் வாக்காளர்களைச் சென்றடைவதிலும் அவர்களைத் திரட்டுவதிலும் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்களிடையே வலுவான வாக்குப்பதிவை உறுதி செய்வதில் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தத் தொகுதியில் மலாய், சீன வாக்காளர்களின் விகிதம் ஏறக்குறைய சமமாக உள்ளது.

வாக்காளர்களில் சுமார் 14% இந்திய சமூகத்தினர் இருப்பதால், கடும் போட்டி நிலவும் இந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிப்பதில் இந்திய வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இந்திய சமுதாயம் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset