நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் ஆணைக்கு தேசிய முன்னணி துரோகம் செய்யவில்லை; ஒற்றுமை அரசாங்கத்திற்கு முன்பே ஜொகூர் அரசாங்கம் நிறுவப்பட்டது: ஜாஹித்

பெர்லிங்:

மக்களின் ஆணைக்கு தேசிய முன்னணி ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. 

மாறாக ஒற்றுமை அரசாங்கத்திற்கு முன்பே ஜொகூர் அரசாங்கம் நிறுவப்பட்டது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம், தேசிய முன்னணி மக்களின் ஆணைக்கு துரோகம்  செய்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதில் துளியும் உண்மை இல்லை.

உண்மையில் மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு முன்பே ஜொகூரில் தேசிய முன்னணி மாநில அரசாங்கம் நிறுவப்பட்டது.

நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. 

ஜொகூர் மாநில அரசாங்கம் என்பது, புத்ராஜயாவில் ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு முன்பே நிறுவப்பட்ட ஒரு தேசிய முன்னணி அரசாங்கமாகும்.

பெர்லிங் மாலில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற ராமா மெஸ்ரா விழாவில் தனது உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset