நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; மாபெரும் திட்டங்களுக்கு மட்டுமல்ல, மக்களின் நலனுக்கும் முன்னுரிமை கொடுங்கள்: அன்வார்

ஜொகூர்பாரு:

மாநில அரசு மாபெரும் வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இன்னும் தீர்க்கப்படாத மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் புறக்கணிக்கக் கூடாது.

நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

செயல்படுத்தப்படும் வளர்ச்சியானது கிராமப்புற, தொலைதூர, ஏழ்மையான நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயனடைய வேண்டும்.

நாம் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். வளர்ச்சி ஏற்கனவே இருக்கிறது.

ஆனால் என்ன வளர்ச்சி இல்லை? இன்னும் சமச்சீரான வளர்ச்சி, கிராமப்புறங்கள், ஏழ்மையான நகர்ப்புறப் பகுதிகள் என அனைத்தையும் கருத்தில் கொள்ளும் வளர்ச்சி. அதுதான் இன்னும் இல்லை.

மத்திய அரசு உண்மையில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

நெடுஞ்சாலைகள், ஆர்.டி.எஸ், இ-ஆர்ட், ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றை நாங்கள் தொடர்வோம். 

ஆனால், வளர்ச்சியின் தாக்கம் அடித்தட்டு மக்களால் உணரப்பட வேண்டும் என்று  கெம்பாஸில் இளைஞர்களுடனான ஒரு கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset