செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் வேட்பாளராக இருப்பதை விட, தேர்தல் பிரச்சார கேந்திரமாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்: கைரி
ஜொகூர்பாரு:
நெகிரி செம்பிலானில் வேட்பாளராக இருப்பதை விட, தேர்தல் பிரச்சார கேந்திரமாக இருப்பதே எனக்கு பொருத்தமானதாக இருக்கும்.
அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.
அம்னோ கட்சியில் சமீபத்தில் மீண்டும் தன்னை இணைந்து கொண்டேன்.
இந்நிலையில் நெகிரி செம்பிலான் தேர்தலில் வேட்பாளராக இருப்பதை விட, தேர்தல் பிரச்சார கேந்திரமாக இருப்பதே எனக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
தேசிய முன்னணி தேர்தல் பிரச்சார கேந்திரத்தின் உறுப்பினராக இருப்பதே தனக்கு மிகவும் பொருத்தமானது.
நெகிரி செம்பிலான் தேர்தலில் வேட்பாளராக இருப்பதை விட, ஒரு வழக்கமான கேந்திரமாக இருப்பதையே நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்.
ஒரு பிரச்சார கேந்திரமாக உதவுவதே எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.
பிரச்சாரங்கள், உரையாடல்கள் மூலம் என்னால் பங்களிக்க முடியும்.
நான் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், நமது நண்பர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க பல துறைகளில் என்னால் உதவ முடியும் என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 9:34 pm
தேசிய முன்னணிக்கு பாஸ் ஆதரவு; அரசியல் ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்காது: ஜாஹித்
July 5, 2026, 9:33 pm
