செய்திகள் மலேசியா
2027 பட்ஜெட்டில் படிவம் 6 மாணவர்களுக்கு உதவித் தொகை: பிரதமர் கோடிக்காட்டினார்
மூவார்:
2027 பட்ஜெட் தாக்கல் உரையில் படிவம் 6 மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை சூசகமாகத் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் ஜொகூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் (சட்டம் 5) கீழ் உள்ள விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்,
இந்த நேரத்தில் இவ்விஷயம் குறித்து விரிவாகக் கூற அவர் மறுத்துவிட்டார்.
முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் இவ்விஷயம் தொடர்பான முன்மொழிவை எழுப்பியதாக அவர் கூறினார்.
ஜொகூரில் இதைவிட அதிகமான தகவல்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.
ஏனெனில் அது தேர்தல் விதிகளை மீறுவதாகும்.
ஆனால், இந்த விஷயம் சில காலத்திற்கு முன்பு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சரால் எழுப்பப்பட்டது.
எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசின் விருப்பம் குறித்துக் கேட்கப்பட்டபோது, 2027 பட்ஜெட்டின் போது காத்திருங்கள்.
நான் ஒரு நல்ல செய்தியை அறிவிப்பேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 9:34 pm
