செய்திகள் மலேசியா
ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
ரவாங்:
ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ரவாங் வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக வீரகத்தி விநாயகர் ஆலயம் விளங்குகிறது.
ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ பாலா தலைமையில் ஆலய திருப்பணிகள் நிறைவுப் பெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ரவாங் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மஹிமாவின் தலைவரும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ என். சிவகுமார் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டேன்.
இந்த புனிதமான நிகழ்வு, தெய்வீக அருளாலும் பக்தியாலும் நிரம்பியிருந்ததுடன், கோயிலுக்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக மைல்கல்லாக அமைந்தது.
மேலும் ஆலயத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதிலும், பக்தர்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதிலும் ஆலய நிர்வாகம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
இது இந்து சமூகத்தின் வளமான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன.
இந்தப் புனிதமான மகா கும்பாபிஷேகம் கோயிலுக்கும் பக்தர்களுக்கும், தேசத்திற்கும் நீடித்த அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 9:34 pm
தேசிய முன்னணிக்கு பாஸ் ஆதரவு; அரசியல் ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்காது: ஜாஹித்
July 5, 2026, 9:33 pm
