செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: கானாவை வீழ்த்திய கொலம்பியா
கான்சஸ் சிட்டி:
கொலம்பியாவும் கானாவும் மோதிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் கொலம்பியா வெற்றிபெற்றுள்ளது.
கான்சஸ் சிட்டி (Kansas City) அரங்கில் ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டத்தில் 14ஆவது நிமிடத்திலேயே கொலம்பியாவின் ஜோன் அரியாஸ் (Jhon Arias) முதல் கோலை அடித்தார்.
அதன் பிறகு ஆட்டம் பரபரப்பாகவே நடந்தது. ஆனால் இரு அணிகளாலும் கோல் போட முடியாமல் தடுமாறின.
ஆட்டத்தில் மஞ்சள் அட்டைக்குப் பஞ்சமில்லை.
கொலம்பியாவின் இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் கானாவின் மூன்று பேருக்கும் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது.
ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களுக்குள் இரு அணிகளுமே மாற்று ஆட்டக்காரர்களைக் களத்தில் இறக்கவேண்டியிருந்தது.
இரு அணி வீரர்களும் காயமடைந்ததால் அவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் விளையாடத் தொடங்கினர்.
15 நிமிடங்களுக்குள் இத்தகைய மாற்றம் செய்வது உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் முதல் முறை.
கொலம்பியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 4ஆவது லத்தீன் அமெரிக்க நாடு அது.
அடுத்த ஆட்டத்தில் அது சுவிட்ஸர்லந்துடன் மோதவிருக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 10:31 am
கனடா ஓபனில் அபார வெற்றி: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தார் லீ ஜீ ஜியா
July 4, 2026, 9:53 am
உலகக் கிண்ணம்: பெனால்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எகிப்து
July 4, 2026, 9:52 am
உலகக் கிண்ணம்: கேப் வெர்டே அணியை வீழ்த்தி நூலிழையில் பிழைத்த அர்ஜெண்டினா
July 3, 2026, 1:46 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி சுற்று 16க்கு முன்னேறிய போர்த்துகல்
July 3, 2026, 8:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரியாவை விழ்த்தியது ஸ்பெயின்
July 2, 2026, 11:22 am
ஃபிஃபா உலக கிண்ணம்; பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட அதிரடியால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம்
July 2, 2026, 10:07 am
உலகக் கிண்ணம் இங்கிலாந்து வெற்றி: பெலேவின் சாதனையை முறியடித்த ஹாரி கேய்ன்
July 1, 2026, 2:00 pm
