நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம் இங்கிலாந்து வெற்றி: பெலேவின் சாதனையை முறியடித்த ஹாரி கேய்ன்

அட்லாண்டா:

பிரேசில் வீரர் பெலேவின் சாதனையை இங்கிலாந்து அணி கால்பந்து கேப்டன் ஹாரி கனே தகர்த்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32இல் இங்கிலாந்து அணியினர் டிஆர் காங்கோ அணியை சந்தித்து விளையாடினர்.

இவ்வாட்டம் ஜார்ஜியா அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் டிஆர் காங்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக இரண்டு கோல்களையும் அதன் கேப்டன் ஹாரி கேய்ன் அடித்தார்.

16 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்த பெலே 3 முறை கிண்ணத்தை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் வைத்துள்ளார்.

தற்போது கேய்ன் 13 உலகக் கிண்ண கோல்களுடன் பெலேவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டுக்கான, எல்லா காலங்களிலும் முன்னணி கோல் வீரரான கேரி லைன்கெர்ரையும் கனே முந்தியுள்ளார்.

இதுதவிர, அனைத்துலக போட்டி தொடர்களில் 20 கோல்களும், தன்னுடைய நாட்டுக்காக 84 கோல்களும் அடித்தவராகவும் அவர் உள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset